திருச்சி கமிஷ்னர் உத்தரவு

தனிமை’ வீடுகளுக்கு போலீஸ்.. திருச்சி கமிஷனர் ஏற்பாடு


வெளிநாடுகளில் சென்று வந்தவர்கள் மற்றும்  கரோனா பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், நெருங்கிய பழகிய நபர்கள் ஆகியோர் சுகாதாரத்துறை மற்றும் போலீசாரால் கண்டறியப்பட்டு ஆஸ்பத்திரிகளிலும்,  அவரவர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் அவர்களது குடும்பத்தினர் உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் உட்பட யாரிடமும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது எனவும் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.


இதுபோன்றவர்களின் வீடுகளை பொதுமக்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் சம்பந்தப்பட்ட வீடுகளில் எச்சரிக்கை ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டுள்ளன.


" alt="" aria-hidden="true" />


இவ்வாறாக  திருச்சி மாவட்டத்தில் 483 பேரின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டி சுகாதாரத் துறை மற்றும் வருவாய்த் துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி நகரில் மட்டும் தனிமைப்படுத்தப்பட்ட 283 வீடுகளில் பாதுகாப்பிற்காக போலீஸ் நிறுத்தப்பட்டுள்ளனர். சம்மந்தப்பட்ட நபர்கள் வெளியே செல்லாத வகையிலும் அவர்களை யாரும் பார்த்து விடக்கூடாது என்பதற்காகவும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த போலீஸ் பாதுகாப்பு 24 மணி நேரமும் இருக்கும் வகையில் போலீசார் ஷிப்ட் முறையில் நிறுத்தப்பட்டுள்ளதாக திருச்சி மாநகர காவல்துறை கமிஷனர் வரதராஜூ கூறியுள்ளார்.