காட்பாடி:
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் உள்ளாட்சி தேர்தல் இடஒதுக்கீடு தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.
சென்னையில் நிருபர்களிடம் கேஎஸ் அழகிரி கூறும்போது:-
எனது கருத்தால் திமுக உடனான கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. திமுக தலைமை அறிவுறுத்தியும் உள்ளாட்சியில் சில பகுதிகளில் இடங்கள் ஒதுக்கப்பட வில்லை. கட்சியின் கீழ்மட்டத்தில் உள்ளவர்களின் ஆதங்கத்தையே எனது அறிக்கையில் வெளிப்படுத்தினேன். திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு தற்போது கூட பொங்கல் வாழ்த்து கூறியுள்ளேன்.
இந்நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் காட்பாடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிப் போனால் போகட்டும். எங்களுக்கு என்ன நஷ்டம்? கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதால் அது வாக்கு வங்கியை பாதிக்காது என்று கூறியுள்ளார்